உலகில் பாலைவனங்களே இல்லாத கண்டம் எது?
ஐரோப்பா
விளக்கம்::
ஐரோப்பா கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும்.
ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது.
இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும்.
உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் ஆசியா, ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது.
ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவில் குறைந்த செலவில் லிக்னைட் நிலக்கரி எங்கு கிடைக்கிறது?
நெய்வேலி
விளக்கம்::
இந்தியாவில் குறைந்த செலவில் லிக்னைட் நிலக்கரி நெய்வேலியில் தான் கிடைக்கிறது. நெய்வேலி (ஆங்கிலம்:Neyveli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். இங்கு நிலக்கரி சுரங்கங்களும் மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில். 1956ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர் லால் நேரு அவர்களால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது?
6 ஆவது இடத்தில்
விளக்கம்::
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா உலகளாவிய அளவில் 6 ஆவது இடத்தில் உள்ளது..

நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் என்னால் பதிவுகள் ஏதும் பதிவிட முடியவில்லை எனக்கு நேரம் கிடைக்கும் போது பதிவுகளை பதிவிடுகிறேன் அனைவரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்
இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?
ஹைதராபாத்
விளக்கம்::
சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாகப் பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய்.
1946 ஏப்ரல் 1 அன்று ஹவாய் தீவைத் தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949 ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது.
அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது.
அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்கக் கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 1960 ஆம் ஆண்டில் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது.
முன்னரே முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே இறந்தனர்.இதே போல இந்தியாவில், இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு என்பது இந்தியப் பெருங்கடலின் கரைகளில் வாழும் மக்களுக்கு வரவிருக்கும் சுனாமி பேரலை பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ஒரு ஏற்பாடாகும். 2004 சுனாமி நிகழ்வுக்கு பின் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலில் இந்திய பெருங்கடல் பகுதியில் லட்சக் கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். இனி வரும் காலங்களில் சுனாமி பேரலை ஏற்பட்டால் அது கரையை அடையும் முன் கரையில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்ப இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டு உள்ளது.
.

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வின்ஸ்டன் சர்ச்சில் எந்த ஆண்டு பெற்றார்?
1953
விளக்கம்::
சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். ஐக்கிய இராச்சியத்தின் 1940 முதல் 1945 வரை மீண்டும் 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்த சர்ச்சில் இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக கருதப்படுகிறார்.சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர், பிரித்தானிய இராணுவத்தின் அதிகாரி, வரலாற்றியலாளர், அவரது எழுத்திற்காக நோபல் பரிசு பெற்றவர், வரைவாளர் போன்ற சிறப்புப் பெருமைகளையும் கொண்டவர். போர் தந்திரமிக்கவர் என்பதை இராணுவத்தில் பணிபுரிந்தபோதே நிருபித்தவர்.
இந்தியா, சூடான், இரண்டாம் போயர் போர்களில் களம் கண்டவர். மேற்கு முன்னணியருடன் முதலாம் உலகப்போரில் பிரித்தானியா போர்புரிந்தபோது ராயல் ஸ்காட் பியூசிலர்ஸ் போரின் 6 வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி அதன் வெற்றியில் பங்கு கொண்டார். தீடீரென தோன்றிய இரண்டாம் உலகப்போரின் போது முதல் கோமகனின் கப்பற்படைத் தலைவராக நிவிலி சாம்பர்லின் பதவி விலகலைத் தொடர்ந்து மே 10.
, 1940 அன்று நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமாராகப் பதவியேற்று பிரித்தானிய இராணுவத்தினரை அச்சு சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதன் மூலம் வெற்றியை நிலைநாட்டினார்.1945 ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.
மீண்டும் 1951 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் 1955 ல் ஒய்வு பெறும் வரை பதவியில் தொடர்ந்தார். இரண்டாம் இராணி எலிசபெத் ஆல் இலண்டன் கோமகன் (Duke of London) பதவி வழங்க விருப்பம் தெரிவித்தார் ஆனால் சர்ச்சிலின் மகன் ராண்டால்ப் சர்ச்சில்- சர்ச்சிலின் மறைவுக்குப் பின் மரபுரிமைப் பெறுவார் என்று எழுந்த எதிர்ப்பலையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. இராணி சர்ச்சிலின் இறப்பை இராச்சியத்தின் துயரமாக அனுசரிக்க ஆணையிட்டு சர்ச்சிலுக்கு இறுதி மரியாதை செய்தார்.
இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே. அதுமட்டுமன்றி ஐக்கிய அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டாவது நபரும் இவரே. இலக்கியத்திற்கான நோபல் பரிசை வின்ஸ்டன் சர்ச்சில் 1953 ஆம் ஆண்டு பெற்றார்.

நமது நாட்டில் முதலில் அமைக்கப்பட்ட மாநிலம் எது?
உத்திரப் பிரதேசம்
விளக்கம்::
இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh). இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள்.
இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. சிங், சந்திரசேகர், சரண் சிங், லால் பகதூர் சாஸ்திரி இம்மாநிலத்தில் பிறந்தவர்கள். இதுவே நமது நாட்டில் முதலில் அமைக்கப்பட்ட மாநிலம் ஆகும்.

வரதட்சணை தடை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1961
விளக்கம்::
"இந்திய வரதட்சணை தடைச் சட்டம் 1961, வரதட்சணை கேட்பதையும், தருவதையும், ஏற்றுக்கொள்வதையும் தடை செய்கிறது. திருமணம் நடைபெறுவதற்கு முன்நிபந்தனைகளாகக் கேட்கப்படும் அல்லது தரப்படும் பரிசுகள் 'வரதட்சணை'யாகக் கருதப்படுகிறது. முன்நிபந்தனைகளற்றுத் தரப்படும் அல்லது பெறப்படும் பரிசுகள் வரதட்சணையாகக் கருதப்படுவதில்லை. மேலும் அது சட்டத்திற்குப் புறம்பானதுமில்லை.
வரதட்சணை கேட்ட அல்லது அளித்த குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது ரூபாய் 5000 வரையிலான அபராதமோ விதிக்கப்படலாம்.இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலும் செயற்பாட்டில் இருந்த வரதட்சணைக்கு எதிரான பல சட்டங்களுக்கு மாற்றாக இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. வரதட்சணை காரணமாக நிகழும் கொலைகள், கட்டாயத் தற்கொலைகள் ஆகியவை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்கப்படும்.
வரதட்சணை மரணங்களை ஒழிப்பதற்காக இந்தியப் பெண்களின் உரிமைச் செயற்பாட்டாளர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்ததன் பலனாக ""வரதட்சணை தடைச் சட்டம் 1961"", ""இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 498 a"" (1983 இல் இயற்றப்பட்டது) ஆகியவை செயற்பாட்டிற்கு வந்துள்ளன. ""குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்புச் சட்டம் 2005"" (PWDVA) இன் கீழ், குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலரிடம் முறையீடு செய்வதன் மூலம் பெண்கள் தங்களுக்கு நேரும் வரதட்சணை வன்கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட முடியும். ஆனால், இன்றைய சமூக கால கட்டத்தில் சில பெண்கள் இதனை மிகவும் தவறாக தங்கள் சுயநலம் மற்றும் சுய லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும், புகுந்த வீட்டை இந்த சட்டத்தை வைத்து பயமுறுத்தி குடும்பத்தை பிரிக்கும் அளவிற்கு சென்று விட்டது காலக் கொடுமை தான். ".

விமானம் தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் உலோகம் எது?
கோபால்ட்
விளக்கம்::
கோபால்ட் என்பது குறியீடு Co என்பதையும் அணுவெண் 27 இனையும் கொண்ட மூலகமாகும். இது இயற்கையில் வேதியியல் இணைந்த வடிவத்தில் மட்டுமே கிடைக்கிறது. கோபால்ட் பூமியில் மிக அரிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு தனிமம் ஆகும். எரிகற்களில் கோபால்டின் சேர்மானம் அதிகமுள்ளது, பொதுவாக ஆர்செனிக்.
கந்தகம், செம்பு, பிஸ்மத் போன்ற தனிமங்களோடு கோபால்ட் சேர்ந்து காணப்படும். பூமியின் புறவோட்டில் இதன் செழிப்பு 0.003 % மட்டுமேஉள்ளது.
ஜெர்மன் மொழியில் 'கோபால்ட்-kobold' என்றால் தீங்கிழைக்கும் ஒரு கெட்ட ஆவி என்று பொருள். கோபால்ட் சுரங்கங்களில் நிகழும் விபத்துகளுக்கு இக்கெட்ட ஆவியே காரணம் என்று முன்னோர்கள் நம்பியதால் இப்பெயர் நிலைபெற்றது.1735 ல் ஸ்வீடன் நாட்டு வேதியியலார் கியார்க்பிராண்ட் (Georg Brandt) என்பவர் கோபால்ட் தாதுவைப் பகுப்பாய்வு செய்து கோபால்ட்டைத் தனியே பிரித்தெடுத்தார்.
கோபால்ட்டும் நிக்கலும் இயற்கையில் இணைந்தே காணப்படுகின்றன. இவற்றைத் தனித்துப் பிரிக்கும் ஒரு வழிமுறையை 1834 ல் சார்லஸ் ஆஸ்கின் என்பவர் கண்டுபிடித்தார் .குளோரின் ஊட்டப்பட்ட சுண்ணாம்பு நீரில், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆக்சைடுகள் இரண்டுமே சேர்ந்து வீழ்படிவாகின்றன.
இதில் பாதியளவு நீர்மத்தை எடுத்துக் கொண்டால் கோபால்ட் ஆக்சைடு மட்டுமே வீழ்படிவாகின்றது. போதிய கரைப்பான் இல்லாததால் நிக்கல் அப்படியே கரைசலில் தங்கி விடுகின்றது. வேதியியல் வினையால் ஒத்த இரு தனிமங்களைப் பிரித்தெடுக்க இவ் வழிமுறையையே இன்றைக்கும் பின்பற்றுகின்றார்கள்.
விமானம் தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் உலோகம் இதுவே ஆகும்..

பிரபல இசை மேதை மொசார்ட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ஆஸ்திரியா
விளக்கம்::
மொசார்ட் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஒரு மிகப் பெரிய இசை மேதை ஆவார். இவரது இசையை 10 நிமிடம் கேட்டால் சாதாரணப் பொருட்களுடன் தொடர்புடைய காலம் மற்றும் இடம் பற்றிய கற்பனைத் திறன் தற்காலிகமாக மேம்படுகிறது. இதனை மொசார்ட் விளைவு என்கின்றனர். சில ஆராய்ச்சியாளர்கள் அதை உறுதி செய்தாலும் வேறு சிலர் இதை ஒப்புக் கொள்ள மறுத்தனர்.
இசையில் மயங்கி தன் மனதைப் பறிகொடுத்துவிட்டு மகிழ்ச்சியால் துள்ளி எழும்போது ஏற்படும் உற்சாகமே இப்படி வெளிப்படுகின்றது என்றும், நுகர் உணர்வு இல்லாவிட்டால் இப்படி நிகழ வழியில்லை என்றும், மொசார்ட் விளைவு என்று ஒன்றும் இல்லை என்றும் இவர்கள் கூறினார்கள்..

முதன் முதலில் 1899 ஆம் ஆண்டு எந்த இந்திய நகரம் மின்சார வசதி பெற்றது?
கொல்கத்தா
விளக்கம்::
முதன் முதலில் நம் இந்தியா 1899 ஆம் ஆண்டு கொல்கத்தா நகரத்தில் தான் மின்சார வசதி பெற்றது.பிறகு இது மற்ற நகரங்களுக்கும் வளர்ந்தது. எனினும் இன்றும் கூட பல கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லை என்பது தான் ஆச்சர்யம்.இந்தியாவின் தனிநபர் ஆண்டு வீட்டு மின்நுகர்வு 2009ஆம் ஆண்டில் சராசரியாக 96 kWh ஆக இருந்தது.
இது உலகளவில் விளங்கும் 2600 kWhக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 6200 kWh மின்நுகர்வுகளைவிட பலமடங்கு குறைவானது. வீடு, விவசாயம் மற்றும் தொழிற்துறைத் தேவைகளை உள்ளிட்ட இந்தியாவின் மொத்த தனிநபர் மின்நுகர்வு 400 முதல் 700 kWh ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 2012 இல் வெளியான ஒரு மதிப்பீட்டின்படி இது 778 kWh ஆகும்.

புத்தர் சிரிக்கிறார்' என்ற வார்த்தையை 1974 ஆம் ஆண்டு எந்த வெற்றியை குறிப்பதற்காக இந்தியா பயன்படுத்தியது?
அணுகுண்டு சோதனை
விளக்கம்::
சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) அல்லது புத்தர் சிரிக்கிறார் என்பது இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை (பொதுவாக அணு குண்டு சோதனை என மக்களால் கருதப்படுவது) குறிப்பதற்கான குறிச்சொல் ஆகும். இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது. சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது.
இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி. டி வெடிபொருள் வெடிப்புக்குச் சமம்) என கணிக்கப்பட்டுள்ளது..

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி நமது நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை சதவீதம்?
65.38 சதவீதம்
விளக்கம்::
இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையே கொண்டிருந்தாலும் உலகின் 17.5 சதவீத மக்கள் தொகையைக்கொண்டுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா மட்டுமேயாகும்.
ஏறக்குறைய 50 சதவிகிதம் 25 வயதிற்கும் , 65% சதவிகிதம் 35 வயதிற்கு குறைந்தவர்களாவர். 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி , 72.2 சதவிகிதம் மக்கள் 6,38,000 க்கும் அதிகமான கிராமங்களில் வாழ்கின்றனர்.
மீதமுள்ள 27.8 சதவிகித மக்கள் 5100-க்கும் மேற்பட்ட பெரு மற்றும் சிறு நகரங்களில் வாழ்கின்றனர். இந்திய அரசானது மொத்தம் 22 மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது.
80%-க்கும் அதிகமான மக்கள் இந்துக்கள் ஆவர். மேலும் இந்தியாவில் 13.4 விழுக்காடு இசுலாமியர்கள் வசிக்கின்றனர்.
இந்தியா உலகிலுள்ள இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், சமணர்கள், மற்றும் புத்த மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி நமது நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 65.
38 சதவீதம் பேர் உள்ளனர்..

இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக் குழுவின் முதல் தலைவர் யார்?
விக்ரம் சாராபாய்
விளக்கம்::
விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971) இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969ம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.1919ஆம் ஆண்டு ஆகசுது 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார்.
அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும் இயற்பியலிலும் தான் இருந்தது.இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விகிரம்.
SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,400 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார். இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக் குழுவின் முதல் தலைவர் இவரே ஆவார்.
விண்வெளித்திட்டங்கள் தவிர, பஞ்சாலைத் தொழில், மேலாண்மைப்பயிற்று நிலையம் ஆகியவற்றையும் தொடங்கினார்..

குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்திய மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
விளக்கம்::
குழந்தைத் தொழிலாளர் (child labour) என்பது தொடர்ந்து, நீடித்தப் பணியில் குழந்தைகள் தொழிலாளர்களாக ஈடுபடுவதைக் குறிக்கிறது. எல்லா நாடுகளிலும் சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரிய சர்வதேச நிறுவனங்களில் கூட இக்கொடுமை நடைபெறுகிறது. கஹதோதக் குழந்தைத் தொழிலாளர் பணியமர்த்தப்படுவது வரலாற்றுக் காலத்தில் கூறப்பட்டாலும், உலகளாவிய கல்வி முறை, தொழில்துறையில் ஏற்பட்ட வேலை மாற்றம், வேலையாளர்களுக்கும், குழந்தைகளின் உரிமைகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துக்களால் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது உலகெங்கும் பரவியுள்ளது.
வளர்ச்சியடைந்த பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளரின் வயது மாறுபட்டதாக உள்ளது. பள்ளி வேலை மற்றும் வீட்டு வேலை தவிர பிற வேலைகளுக்கு குழந்தைகள் பணியமர்த்தக்கூடாதென வளர்ச்சியடைந்த நாடுகள் கூறுகின்றன. குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கண்டிப்பாக பணியமர்த்தக்கூடாது.
இந்த குழந்தைத் தொழிலாளர் வயது வித்தியாசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதுடன், பெற்றோரின் சம்மதமில்லாமல் வேலைக்கு அனுமதிக்கக்கூடாது என்பதாகும். குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசம் தான்.

ஆங்கிலத்தை மட்டும் ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலம் எது?
நாகலாந்து
விளக்கம்::
நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலை நகரம் கோஹிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார். நாகாலாந்து டிசம்பர் 1, 1961 ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.
பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) -0.58% ஆக குறைந்துள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.
ஆங்கிலத்தை மட்டுமே ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலம் இதுவே ஆகும்..

1786 இல் அமைக்கப்பட்ட முதல் பொட்டானிக்கல் தோட்டம் எந்த இடத்தில் அமைந்து உள்ளது?
கொல்கத்தா
விளக்கம்::
பல்வகைத் தாவரங்களை வளர்க்கும் இடம் தாவரவியல் பூங்கா ஆகும். தாவரங்களை வளர்த்து, பாதுகாத்து, வகைப்படுத்தி அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே தாவரவியல் பூங்காக்களின் முக்கிய நோக்கம். தாவரங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றைப் பற்றிய அறிவைப் பகிர்வதும் பெரும்பாலான தாவரவியல் பூங்காக்களின் நோக்காக அமைகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் செம்மொழிப் பூங்கா என்ற பெயரில் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது.
1786 இல் அமைக்கப்பட்ட முதல் பொட்டானிக்கல் தோட்டம் கொல்கத்தாவில் தான் அமைக்கப்பட்டது..

அமெரிக்க அரசின் சிறந்த ராஜ தந்திரி விருதைப் பெற்ற முதல் ஆசியர் யார்?
திரு.கே. ஆர். நாராயணன்
விளக்கம்::
கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார்.
அமெரிக்க அரசின் சிறந்த ராஜ தந்திரி விருதைப் பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்..

பால், தயிர் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் எந்த மாநிலத்தில் வசிக்கின்றனர்?
ராஜஸ்தான்
விளக்கம்::
இராஜஸ்தான் இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று. செய்ப்பூர் இராசத்தானின் தலைநகராகும். உதயப்பூர், சோத்பூர் மற்ற முக்கிய நகரங்கள். இராசஸ்தானி, மார்வாரி, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழிகள் ஆகும்.
இம்மாநிலத்தில் தார் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் எனுமிடத்தில் முதன் முதலாக 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாளன்று சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் இந்தியாவின் முதல் அணுகுண்டு வெடித்து சோதனை செய்யப்பட்டது. பின்னர் இரண்டாம் முறையாக அதே இடத்தில், 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் சக்தி நடவடிக்கை எனும் பெயரில் ஐந்து அணுகுண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது. பால், தயிர் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் இந்த மாநிலத்து மக்கள் தான்.

நோபல் பரிசை மிக இளவயதில் பெற்ற முதல் இந்தியர் யார்?
சர். சி. வி. ராமன்
விளக்கம்::
நோபல் பரிசை 42 ஆவது வயதில் பெற்றார் சர். சி. வி. ராமன்.
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.
இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.

நோபல் பரிசை அதிக வயதில் பெற்ற முதல் இந்தியர் யார்?
மதர் தெரசா
விளக்கம்::
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.
முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.அன்னை தெரெசாவுக்கு பல விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு அருங்காட்சியகங்கள் அமைத்ததன் மூலமாகவும், பல்வேறு சபைகளின் பாதுகாவலராக ஏற்கப்பட்டதன் மூலமாகவும், பல கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதன் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. நோபல் பரிசை அதிக வயதில் பெற்ற முதல் இந்தியர் இவர் தான்.
நோபல் பரிசை 69 ஆவது வயதில் பெற்றார் மதர் தெரசா..