Herbal products ready for supply. Whatsapp to +91 73869 32639 to place orders
Punarvasu Nakshatra person use these in your day today life as idol or images or wall paper and serve the bird and animal if u come across in your life. You can fix your aim perfectly.
புனர்பூச நட்சத்திர ஆட்கள் இந்த விஷயங்களை எதாவது ஒரு விதத்தில் வாழ்க்கையில் பயன் படுத்தி கொள்ளுங்கள். இந்த பறவை விலங்கு எங்கேனும் பார்த்தால் பராமரிக்க உதவுங்கள். வாழ்க்கை மேம்படும். இலக்கு புரியும்.
Astro Brindha 7373092818

❤️அகஸ்திய மகரிஷி❤️ அருளிய
🌹ஆதித்ய ஹ்ருதயம்🌹 தமிழ் விளக்கம்
#ஆதித்ய_ஹ்ருதயம் என்பது என்ன ?
#ஆதித்யா என்றால் சூரியன். ஆதித்ய ஹ்ருதயம் என்பது ஒருவகையான சிகிச்சை முறை மந்திரம். குறிப்பாக இதயத்திற்கும் மனதிற்கும் ஊக்கமளிக்கும் சிகிச்சைமுறை
உலக நாயகனான ஆதித்யனின் இருதயமாகவும் போற்றப்படுகிறது.
ஆதித்ய ஹ்ருதய மஹா மந்திரம்
சூட்சுமமான பல கருத்துக்கள் அடங்கிய இந்த ஸ்தோத்திரத்தை வெவ்வேறு அறிஞர்களின் கருத்தை ஆய்ந்து தொகுத்து பகிர்ந்துள்ளேன்.
பாடலை இங்கே கேட்கலாம். இந்த ஆடியோவில் ஆரம்ப துதியில் இருந்து முடிவு துதி வரை முழுமையாக உள்ளது.
“இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார். சூரிய பகவானின் பல்வேறு பெயர்களின் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணைத்துள்ளேன்.
உலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். ஹிந்து சூரிய வழிபாட்டு முறைகளில் முக்கியமானது அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம்.
இரகசியம் -1
எல்லா வேத வரிகளும் இருவித அர்த்தங்களை கொண்டுள்ளன.
வெளிப்படையானது - சடங்குகள் சார்ந்தது,
உட்கருத்து - ஆத்ம போதத்திற்கானது
உதாரணமாக சூரியனை போற்றும் ஸப்த ஸப்தி எனும், சூரியனின் பதம் 7 குதிரைகள், 7 கதிர்கள் (VIBGYOR) மட்டும் குறிப்பதல்ல, மனித உடலில் உள்ள 7 மூலாதார சக்கரங்களையும் குறிக்கிறது.
அது போலவே,
அண்டத்தை படைத்து, காத்து, ஒடுக்கும் பரம்பொருள் பரமாத்மன். (மனித உடலிலும் அதுவே உள்ளது.)
அப்பரம்பொருளின் பிரகாச வடிவமே இவ்வுலகில் சூரியனாக வெளிப்படுகிறது.
பரம்பொருளின் முழு வடிவையும் மனிதர்களால் பார்க்க இயலாததால் அகஸ்தியர் இராமரை சூரியனை வழிபட சொல்கிறார்.
எனவே இம்மந்திரம் சூரியனை வழிபடுவதற்கு மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பரமாத்மனையும் வழிபடுகிறது.
ஆயுர்வேதம் உடம்பில் முதுகு தண்டில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளதாகவும் அவை ஆன்மீக மையங்களாக செயல்படுவதாகவும் குறிப்பிடுகிறது. நவீன் ஆயுர்வேத மருத்துவர்கள் அவற்றை ஒவ்வொரு நிறத்தோடும், உறுப்போடும் தொடர்பு படுத்துகின்றனர். நிறங்களை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட உறுப்பை குணப்படுத்த முயற்சி செய்கின்றனர்.
புராணம்
தனித்தன்மை மிக்கவர் சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்திய மகரிஷி. ‘வித்யா மண்டல ரிஷி’ என அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. ஒருமுறை உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் அவர் அம்பாளை நோக்கி தவமியற்ற, அன்னை, அவருக்கு உலகம் உய்யும் பொருட்டு ‘ஆதித்த ஹ்ருதயத்தை’ உபதேசித்தாள்.
மகத்தான மந்திரத்தை பெற்ற அகத்தியர், தகுதி வாய்ந்த ஒருவர் மூலம் உலகிற்கு வழங்கினால், அகிலமே பயனடையும் என்று கருதினார். அவர் தேர்வு செய்தது தான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.
ராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது.
வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில், யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் உள்ளது.
இரகசியம் -2
ராம ராவண யுத்தம் மனித மனதிற்குள் உள்ள நல்ல மற்றும் தீய எண்ணங்களுக்கிடையேயான போராட்டம் ஆகும்.
ராமன் சிறந்த உள்ளத்திற்கான அடையாளம்.
இராவணன் என்பது பெண்களை தவறாக நடத்தும் எண்ணம்.
தர்ம சாஸ்திரப்படி இத்தகைய பெரும் கொடிய செயல்களுக்கு தீர்வு இல்லை. தீய எண்ணங்களால் உருவாகும் செயல்களுக்கான விளைவுகளை இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும்.
மகிமைகள்
ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
ஜயாவஹம் (வெற்றி தருவது)
ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் - அழிவற்றது பொங்கி பெருக கூடியது. Akṣayaṁ is the most important quality of the sun.
பரமம் - மிகப்பெருமை கொண்டது
சிவம் - மங்களம் தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது) blessing of all blessings
ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
உத்தமம் - சிறந்தது
பலன்கள்
மனச்சோர்வையும். நோய்களையும் தீர்த்த

ம்.
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி!
– கண்ணதாசன்
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி!
– கண்ணதாசன்
ு, உடலை வச்ரம் போல் மாற்றும்.
எதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அழிந்து விடும்.நம் மீது பகை கொண்டவர்கள் நண்பர்கள் ஆக மாறி விடுவார்கள். மூன்று வேளை பாடம் செய்தார் என்றால் – எங்கேயும் அவருக்கு தோல்வியே ஆகாது. எந்த காரியத்திலும் தோல்வியாகாது. லௌகீக-சத்ருக்களும் நாசமாகி விடுவார்கள். அதோடு ஆன்மீக மார்க்கத்தில் வரும் சத்ருக்கள் – காமம், குரோதம், இத்தியாதி – அவைகளும் நாசமாகி விடும்.
கிரகபீடைகள் நீங்கும். ஆபத்துக் காலங்களிலும்எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும்.துன்பங்கள் தூள் தூளாகும்.
நினைத்த காரியம் நடந்து முடியும். தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும்.
ஜோதிட ரீதியான பலன்கள்
இதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும். சூரிய தோஷம் நீங்கும். தொழுநோய் குணமாகும்
ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.
கண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
ஆண் புத்திர பிராப்தி கிடைக்கும்.
நமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும்.
அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும். அரசாங்க ஆதரவு உண்டாகும். அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும். பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும். ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.
அரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும்.
அரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும்.
எட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வழிமுறை
அதிகாலையில் எழுந்து, சுத்தமாக நீராடி இந்த சூரியனின் மகத்தான மந்திரமான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
இந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதில் உண்மையாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்!
விரதமாக இருந்து சொல்வது மேலும் பயன் தரும்.
நீர் நிலைகள் சூரிய சக்தியை மென்மேலும் பிரதிபலிப்பதால், அவற்றின் அருகில் இருந்து நமஸ்கரிப்பது நல்ல பலன் தரும்.
ஆதித்ய ஹ்ருதயம் இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை.
ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்!
ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும்.
முதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும். பின்பு கணபதியை வணங்கவும். பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும். பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும்.
இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும். கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும். பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும். ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும். எனவே அதனை விலக்க வேண்டும். எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.
வேறு வடிவிலான ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரங்கள்
தமிழ்
மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும்.
சமஸ்கிருத்தில் படிக்க இயலாதவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப் பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டு

'யானைப் பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க.
பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்தக் காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்தக் கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிறும். முக்கியமா... மஸ்து நேரத்துல, தலைமைப் பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்குத் தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அது தான்.
ஒரு யானையப் பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழப் போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கணும்னு திரும்பத் திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும்.
பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அதால அடிச்சு வெளுப்பாங்க. பிளிறும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விட மாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து எந்தப் பாகன் கைல குடுக்குதோ, அவனைத் தான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன் தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமைப் பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவனத் தேர்ந்தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.
அதைப் பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனைப் பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசி காட்டி, பசியத் தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா. அந்தப் பாகனைக் கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.
கட்ட கடைசியா... என்னைக்கு அந்த யானை, பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங் கால்கள மடக்கிக் குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரணும். அப்ப தான் அது முழுசும் பழக்கப்பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும்.
கோவை மாவட்டத்துல 13 பேரைக் கொன்று, கேரள அரசால் சூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.
மஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றைக் கால் சங்கிலி தான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே... ரெட்டைக் காலுக்கு சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும் கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம் தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா... எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட் லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்ர் ன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும். அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார நியாபக சக்தி கொண்ட யானை, தன்னோட பாகன் மேலான பகையத் தீர்த்துக்க... தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனத் தான் தேடும். சிக்குனான்... அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.
சின்னக் கொசுறு தகவல்:
யானைல ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களைக் கொண்ட யானைகளை வளர்க்கவ

ே முடியாது. நம்பகத் தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா.. கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகை தான் அது.
அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானைகளையும், இடுங்கிய கண்களை கொண்ட யானைகளையும், நெற்றி துருத்திய யானைகளையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடுமூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லை னாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும்.
ஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றைத் தந்தம் கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள் தான் ஆட் கொல்லிகள். மற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகிப் போய் விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும் குணமும் உடையது. மனுஷன பார்த்துட்டா, அனல் போல கொதிநிலைக்கு போயிடும். பயங்கர ராட்ஷசன். அது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம் வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டு பிடித்து விடுவார்கள்.
ஒச்சம் இல்லாத, நிமிர்ந்த தலை, சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும், மனிதர்களுடன் முக்கியமாக குழந்தைகளுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குத் தான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்கா விட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளைத் தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களைத் தாக்காது.
பகிர்வு

பூரி ஜகனாதர் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்படும் "நாராயண் ஷிலா " என்பது இது தான். இதை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பெட்டகத்தில் இருந்து வெளிகொணர்ந்து
பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். இவ்வருடம் அவ்வாறு எடுத்து வைத்து பூஜிக்கப்படும் போது கிடைத்த படம் ஆகும். இதை கண்ணார தரிசிப்பவர்கள் அதி பாக்கியசாலிகள். இது சிலருக்கு மட்டுமே வாழ்வில் தரிசிக்க கிடைக்கப்பெறும். அவ்வகையில் நாம் அனைவரும் புண்ணியவான்களே.
பூரி கோவிலுக்கு சொந்தமான இந்த சாலிகிராம் கடைசியாக 1920 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சலின் போது தொற்றுநோய்களின் மோசமான விளைவுகளைத் தடுக்க எடுக்கப்பட்டது. COVID இன் பார்வையில் இது இப்போது மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து தரிசனத்தை எடுத்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.
https://www.instagram.com/p/CBew4BLHTTh/?igshid=cn1340jt1yxw
Courtesy By - Astro GuruNagarajan

ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக மூல மந்திரம் உண்டு. அமைதியாகவும் தெளிவாகவும் ஆழ்ந்த கவனத்தோடும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய மந்திரங்களை அந்தந்த கிரக நாட்களில் அல்லது தினமும் எல்லாமும் குறைந்தபட்சம் மும்மூன்று முறைகள் உச்சரிக்க வேண்டும்.
ஒன்பது முறைகளும் உச்சரிக்கலாம். அவகாசம் இருப்பவர்கள் 27 முறைகளும், 54 முறைகளும், 108 முறைகளும் உச்சரிக்கலாம். குறைந்த அளவு உச்சரித்தாலும்கூட நிறைந்த ஈடுபாட்டையும், ஆழ்ந்த கவனத்தையும் செலுத்துவது அவசியமாகும்.
சூரிய மந்திரம்: Sunday
ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்.
செம்பருத்திப் பூவின் நிறம் உடையவன்; காச்யபரின் புதல்வன்; மிகவும் பிரகாசம் உடையவன்; இருட்டின் பகைவன்; எல்லாப் பாவங்களையும் அழிப்பவன்; அப்பகலவனைப் பணிகிறேன்.
சந்திர மந்திரம்: Monday
ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்.
தயிர், சங்கு, பனி போன்று வெண்மையானவன்; பாற்கடலிலிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். ஸோமன் என்று வேதத்தில் அழைக்கப் பெறுபவன். சிவனது ஜடாமகுடத்தின் அணிகலன். அச்சந்திரனைப் பணிகிறேன்.
செவ்வாய் மந்திரம்: Tuesday
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்.
பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவன்; மின்னலைப் போன்ற ஒளியினன்; குமாரன்; சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன் எனும் செவ்வாயைப் பணிகிறேன்.
புதன் மந்திரம்: Wednesday
ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்.
ஞாழல் மொட்டுப்போன்ற ஒளியுடையவன். உருவத்தின் அழகில் உவமை அற்றவன். சந்திரனின் குமாரன். ஸெளம்யமானவன். அந்த புதனைப் பணிகிறேன்.
குரு மந்திரம்: Thursday
தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன்; பொன்னன்; மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன்; அந்தப் பிருஹஸ்பதியை வணங்குகிறேன்.
சுக்கிர மந்திரம்: Friday
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்.
பனி, முல்லை, தாமரை நூல் போன்ற வெண்மையான நிறமுடையவன்; அசுரர்களின் குரு; எல்லாச் சாத்திரங்களையும் உரைப்பவன். பிருகுவின் புதல்வன்; அந்தச் சுக்கிரனை வணங்குகிறேன்.
சனி மந்திரம்: Saturday
நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்
மை போன்று கறுத்தவன். சூரியனின் குமாரன். யமனின் தமயன். சூரியனுக்கும் சாயா தேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்லும் அந்தச் சனியை நமஸ்கரிக்கிறேன்.
ராகு மந்திரம்: ராகு காலம்
அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்.
பாதி உடல் கொண்டவன்; பெரும் வீரன்; சந்திர சூரியர்களைப் பீடிப்பவன்; அகர ஸ்திரீயின் கர்ப்பத்தில் உதித்தவன். அந்த ராகுவைப் பணிகிறேன்.
கேது மந்திரம்: எம கண்ட வேளை
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.
புரசு மரத்தின் பூப்போன்ற செந்நிறம் கொண்டவன். நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவன். கோபி; கோபத்தின் உருவுடையோன். அந்தக் கேதுவைப் பணிகிறேன்.
இந்த மந்திரங்களை உச்சரிப்பது உங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்துவதற்காகவும், வாழ்க்கையில் நலம் உண்டாவதற்காகவும் தான் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய அபூர்வ சூர்ய கிரகண காலத்தை முழுமையாக பயன்படுத்துங்கள்....
எந்த ஒரு மந்திரத்தையும் வாய்விட்டுச் சொல்லாமல் மனதுக்குள் நினைப்பதே ஜபம்.
வீட்டில் ஒரு முறை ஜபித்தால், *10 முறை வாய்விட்டு சொன்னதற்கான பலன் கிடைக்கும்.*
பழமையான கோவிலுக்குள் ஒரு முறை ஜபித்தால், *1000 முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்.*
கடலோரக் கோவிலில் ஒரு முறை ஜபித்தால், *1 கோடி முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்*
மலை மீது இருக்கும் கோவிலில் ஒரு முறை ஜபித்தால் *2 கோடி முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்*
வருடப் பிறப்பு (சித்திரை 1), மாதப் பிறப்பு (தமிழ் மாதத்தின் முதல் நாள்) போன்ற நாட்களில் ஜெபிக்க மேலே சொன்ன எண்ணிக்கையில் *100 மடங்கு அதிகமாகும்.*
அமாவாசை, பவுர்ணமி திதி வரும் நாட்களில் ஜெபிக்க மேலே சொன்ன எண்ணிக்கையில் *1000 மடங்கு அதிகமாகும்.*
*சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும் நாட்களில் ஜெபிக்க மேலே சொன்ன எண்ணிக்கையில் 10,000 மடங்கு பலனாக அதிகரிக்கும்.*
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் வரும் நாட்களில் கிரகணம் ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து 10 நிமிடம் கழித்து ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். கிரகணம் முடிவதற்கு 10 நிமிடம் முன்பாகவே ஜபித்து முடிக்க வேண்டும்.
*இந்த கால கட்டத்தில் ஒரு முறை மந்திரம் ஜபித்தால்,100 கோடி மடங்கு வாய்விட்டு சொன்னதற்கான புண்ணியம் கிட்டும்*
அதிலும், நாளை காலை வரும் சூரிய கிரகணம் 537 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதால், இந்த சூரியக் கிரகண நேரத்தில் ஜபித்தால்,1 லட்சம் கோடி தடவை வாய்விட்டுச் சொன்னதற்கான புண்ணியம் கிடைக்கும்.
இன்று 21. 06.2020 காலை 10.22 முதல் 01.32வரை சூரியக்கிரகணம் முழுமையாக இருக்கும்.
*காலை 11.46 முதல் 1.46 வரை வரும் சோடச கலை நேரத்தில் உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை வீட்டில் ஜபிப்பது மிகவும் நன்று.*
கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்க வேண்டும்.
ஜபிக்க ஆரம்பிக்கும் போது ஒரு தீபம் எரிந்து கொண்டும், பத்தி புகை பரவிக்கொண்டும் இருக்க வேண்டும்.
உலகத்தில் எந்த நாட்டில் வசித்தாலும், அங்கே இதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.