ABP Nadu
835 subscribers
4.86K photos
4.86K links
ABP Nadu - Official Telegram Channel of ABP Nadu. Follow for all Breaking News from India and across the World in Tamil.

Get the latest at https://tamil.abplive.com/

Follow For More:

ABP News: @abpnewstvofficial
ABP LIVE: @officialabplive
Download Telegram
Independence Day 2024: திருவண்ணாமலையில் உற்சாகத்துடன் மகிழ்ச்சி பொங்க தேசிய கொடியேற்றிய கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.

Read More
விக்ரமுக்கே டஃப் கொடுப்பாங்க போலேயே - ‘தங்கலான்’ கெட்டப்பில் மிரட்டிய திருச்சி பாய்ஸ்

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்பட கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து படம் பார்க்க வந்த ரசிகர்கள் - திரையரங்க நிர்வாகம் உள்ளே அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Read More
Independence Day 2024: 40 ஆண்டுக்கு பின் தஞ்சையில் தேசியக் கொடியேற்றிய பெண் கலெக்டர்

சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Read More
தலித் சமுதாயத்தை சார்ந்தவரை முதலமைச்சராக்குவோம் - அன்புமணி ராமதாஸ்

பட்டியலின சமுதாய மக்கள் ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சார்ந்தவரை முதலமைச்சராக்குவோம் - அன்புமணி ராமதாஸ்

Read More
'டிமான்டி காலனி 2' ... பேய் படம் பார்க்க பேய் போல் வந்த 'IT Guys'

திரைப்படத்தை பார்க்க வந்த ஐ.டி ஊழியர்கள் பேய் வேடம் அணிந்தும், அத்திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடியும் கொண்டாடினர்.

Read More
KP Ramalingam: உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசை காப்பாற்றி உள்ளது - கே.பி.ராமலிங்கம்

தேசிய கொடியுடன் எங்களை போலீசார் கைது செய்திருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும்.

Read More
கோவை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் ஆத்துமீறிய இளைஞர் - பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் 

நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் திடீரென சம்பவம் நடந்த இடம் அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
Independence Day 2024: பெற்றோர் கல்வி கற்கவில்லை என்றாலும் குழந்தைகளை கல்வி கற்க செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

கிராம சபா கூட்டத்தில் குழந்தை திருமணம் செய்வதை தவிர்க்கவேண்டும் 18 வயதில் திருமணம் என்ற சட்டம் இருந்தாலும் 21 வயதிற்கு மேல் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கின்ற பொழுது அவர்களது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்

Read More
Mettur Dam: இரண்டாவது நாளாக 16,500 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 16,500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More
கமகமன்னு வாசனைப்பா... இதுதான் சந்தன மாலையப்பா: இதுல ஸ்பெஷலு தஞ்சாவூருப்பா!!!

Thanjavur Santhanamalai: மகமக்கும் வாசனைப்பா... அடடா... மாலைப்பா.. சந்தன மாலைப்பா.. மலைக்க வைக்கும் வாசனை ஆளையே தூக்கும் பார்த்துக்கோப்பா. இதுல ஸ்பெஷலு தஞ்சாவூருப்பா.

Read More
ABP கோயில் உலா: மயிலாடுதுறை மாவட்ட கோயில்களில் ஆடி கடைவெள்ளி வழிபாடு - பரவசத்தில் பக்தர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிமாத கடை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றனர்.

Read More
சாதிய பாடல்கள் பேருந்துகளில் ஒலித்தால் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை - நெல்லை போலீஸ் எச்சரிக்கை

மாநகரப் பகுதிகளில் பேருந்துகளில் ஜாதி ரீதியிலான பாடல்களை ஒலிக்க கூடாது என்றும், அது போன்ற பாடல்களை அழித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

Read More
நெல்லை, தென்காசியில் நாளை எங்கெல்லாம் மின் தடை, எங்கெல்லாம் ரத்து? இப்பவே உஷாராகிக்கோங்க..!

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம், திருநெல்வேலி கிராமப்புற கோட்டம், வள்ளியூர் கோட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஆகிய ஒரு சில இடங்களில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாத வெண்மை! தஞ்சை மண்ணுக்கே உரிய கலை நெட்டிச் சிற்பக்கலை...!

மிக நுணுக்கம் நிறைந்த, வேலைப்பாடுகளுடன் கூடிய, அற்புத அழகு மிளிரும் நெட்டிச்சிற்பங்கள் தஞ்சையின் கலைப் பெருமையின் மற்றொரு அம்சம்.

Read More
பட்டு வளர்ச்சித்துறையில் ஊழியர்கள் திடீர் இடம் மாற்றம் - ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடக்கும்

பட்டு வளர்ச்சி நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர உள்ளதாக தமிழ்நாடு பட்டு வளர்ப்பு துறை அலுவலர் சங்கம் எச்சரிக்கை.

Read More
ராஜ்ஜியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவராக திகழ்ந்த ராஜராஜ சோழனின் பலம்வாய்ந்த கப்பற்படை 

பெயர் சொன்னாலே போதும் பொறி கலங்கும். எதிரி நாட்டு மன்னர்களுக்கு கிலி ஏற்படும். அத்தகைய பெருமையை உடைய சோழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவராக திகழ்ந்த, மும்முடி சோழர்தான் முதலாம் இராஜராஜ சோழன்.

Read More
Doctors Strike: கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை : சேலத்தில் 2000-க்கு மேற்பட்ட மருத்துவர்கள் 24 மணிநேர பணி புறக்கணிப்பு போராட்டம்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை 7:30 மணி முதல் 8:30 மணிவரை ஒரு மணி நேரம் அனைத்து பிரிவு புற நோயாளிகள் சிகிச்சை புறக்கணித்து ஆதரவு.

Read More
மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,500 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Read More
Sani Pradosham திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சனி பிரதோஷம் கோலாகலம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் ஆடி மாத சனி பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

Read More
Kongu Eswaran: "அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு அண்ணாமலை ஒரு துரும்பை கூட எடுத்துப்போடவில்லை" - ஈஸ்வரன் விமர்சனம்.

முதலமைச்சரின் அழுத்தத்தால் அமைச்சர் உள்பட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

Read More
Doctors strike: திருவண்ணாமலையில் 500 மேற்பட்ட மருத்துவர்கள் புற நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டம்

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை : கண்டித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சுகாதார நிலைய மருத்துவர்கள் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More