Smart Manoj-இன் பதிவுத்தடம் 😎
183 subscribers
371 photos
76 videos
24 files
929 links
Download Telegram
Do you any know true living saint?
“How many success stories do you need to hear before you make your own?”
சமீபத்தில் ஒரு TED Talk பார்த்தேன். Harvard University-யில் இருந்து ஒரு வயதான Professor, 75 ஆண்டுகளாக நடந்து முடிந்த ஓர் ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி பகிர்ந்து கொண்டார். ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் நீண்ட நாள் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆராய்ச்சி அது. கிட்டத்தட்ட 700 மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் 15 வயது முதல் 90 வயது வரை, ஆராய்ந்துள்ளனர். இவர்கள் உலகின் பல நாடுகளில் இருந்தும் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ஆராய்ச்சி முடிவு என்ன தெரியுமா?? ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட நாள் யார் வாழ்ந்தார்கள்???

அதிகமாக அலுவலகத்தில் உழைத்தவர்களா? இல்லை.

புத்திசாலித்தனமாக பணம் சேர்த்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களா? இல்லை.

தேர்தலில் நின்று, அரசியலில் ஜெயித்து நாட்டின் அதிபதி ஆனவர்களா? இல்லை.

கோயிலில் உட்கார்ந்து தியானம் செய்து, யோகா செய்து, கடவுளை தினமும் தொழுதவர்களா? இல்லை.

யாருக்குத் தான் Happy & Healthy with Long life இருந்தது??

"நல்ல" உறவுகள் அல்லது நண்பர்கள் ("Good" Relationship) யாருக்கெல்லாம் இருந்ததோ அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்தனர்! தனித்து இருப்பவர்கள் விரைவில் இறந்து போவார்கள்.

ஆகவே "நல்ல" உறவுகளை வளர்ப்பதில் முக்கியத்துவம் தருவோம். அலுவலகத்தில் hard work செய்து அற்ப ஆயுளில் போக வேண்டாம். பணத்தை அதிகம் தேடாமல், உண்மையான நல்ல நண்பர்களை பெருக்குவோம்!