Jaya Bakti
2K subscribers
26 photos
4 videos
2 files
47 links
Official Channel for sharing important details, book promotions and other news about current events
Download Telegram
🏆16th KUIL VIZHA GIVEAWAY ALERT🏆

Have you or any of your friends participated in KUIL VIZHA in the past years?
If yes, we would love to hear some of your remarkable experiences about KUIL VIZHA.

Steps to win the prizes:
1. Like our Facebook and Instagram official page @jayabaktikuil
2. Share your memories with us by commenting on our Facebook or Instagram post.

The top 3 favourite comments will receive RM50.00 cash and a book voucher worth RM 50.00.
The comments can be either in Tamil or English.

Post your comments on or before 21st June 2021 on our Facebook or Instagram comment boxes.

The comments can be either in Tamil or English.

#jayabaktikuil #16thkuilvizha2021 #kuilvizha2021 #jayabakti #giveaway

https://www.instagram.com/p/CQNb3y0B-dq/

https://www.facebook.com/194758883931771/posts/5591997010874571/?d=n
https://www.facebook.com/194758883931771/posts/6068996056507995/


IMPORTANT UPDATE 🚨
16th Kuil Vizha 2021 🦅🏆

இதோ! அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த 16 வது குயில் விழா 2021 வெற்றியாளர்களுக்கான பரிசு விவரங்கள் …

முன்னதாக அறிவித்தது போலவே அனைத்து வெற்றியாளர்களுக்கும் புத்தக பற்றுச்சீட்டுகளுடன் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். அதேவேளையில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் RM 10 மதிப்புள்ள புத்தகப் பற்றுச்சீட்டும் வழங்கப்படும்.

நாளை வெற்றியாளர் அறிவிப்பு நாளும் பொது வாக்களிப்புக்கான விவரங்களும் அறிவிக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

காத்திருங்கள் மாணவர்களே!

The prizes for Kuil Vizha 2021 is finally out.

As announced earlier, all winners will be getting cash prizes along with book vouchers.

Students who participated in 16th Kuil Vizha 2021 will also get a participation certificate along with RM 10 book voucher that can be used at www.jayabakti.com

We will be announcing more details on the public voting and winner announcement dates tomorrow.

Stay tuned, students!

#16thkuilvizha2021 #jayabaktikuil #jayabakti #sjkt #kuilvizha2021
https://www.facebook.com/194758883931771/posts/6076700812404186/

IMPORTANT UPDATE 🚨

*வாருங்கள்; வாக்களிக்கலாம்* (16ஆவது குயில் விழா)
Let’s vote! ( 16th Kuil Vizha 2021)🦅🏆

16ஆவது குயில் விழா போட்டிகளின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பொதுமக்களான உங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் எனும் நன்னோக்கில் புதிய அணுகுமுறையாக வாக்களிப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனம், அறிவியல் புத்தாக்கப் போட்டி, எழுச்சிப் பாடல் பாடுதல், திருக்குறள் ஒப்புவித்தல், ஆத்திச்சூடி ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளுக்கு மட்டுமே வாக்களிப்பு முறை உள்ளது. கட்டுரைப் போட்டிக்கு வாக்களிப்பு முறை கிடையாது.

நீதிபதிகள் ஒவ்வொரு போட்டிகளிலும் சிறந்த 15 படைப்புகளைத் தேர்ந்தெடுப்பர். அவர்கள் தேர்வு செய்த சிறந்த 15 படைப்புகள் வாக்களிப்புக்காக ஜெயபக்தி அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்களான நீங்கள் உங்களுக்குப் பிடித்த படைப்புகளுக்கு உங்கள் வாக்குகளை வழங்கலாம். இந்தச் சிறந்த 15 படைப்புகளில் அதிக வாக்குகளைப் பெறும் 10 படைப்புகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன.

செப்டம்பர் 30ஆம் திகதி முதல் அக்டோபர் 18ஆம் திகதி வரை வாக்களிக்கலாம்.

நீதிபதிகள் வழங்கிய புள்ளிகளையும் வாக்களிப்பில் பெற்ற வாக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நீதிபதிகளின் முடிவு 70% ஆகும். மீதமுள்ள 30% முடிவு பொதுமக்களின் வாக்களிப்பை அடிப்படையாகக் கொண்டது.

அக்டோபர் 21ஆம் திகதி வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

இவ்வாண்டு, குயில் விழா போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதோடு சிறப்பான படைப்புகளையும் வழங்கியுள்ளனர். ஆதலால், சிறந்த 15 படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் நீதிபதிகளுக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. முதன்முறையாக இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட 16ஆவது குயில் விழாவிற்கு நாங்கள் எதிர்பாராத அளவிற்கு மாணவர்களிடமிருந்து வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. மாணவர்களின் ஆதரவுக்கு ஈடாக ஒவ்வொரு போட்டிகளிலும் சிறந்த 15 படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் கடப்பாடு எங்களுக்கு உள்ளது.

தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.

#jayabaktikuil #kuilvizha2021 #16thkuilvizha2021 #sjkt #competition #tamil



Please note:

16ஆவது குயில் விழா போட்டிகளின் வாக்களிப்பு முறை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
🚨🚨16th KUIL VIZHA 2021 UPDATE🚨🚨

*எவ்வாறு வாக்களிப்பது?* (16ஆவது குயில் விழா)

ஒவ்வொரு போட்டியிலும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 படைப்புகளுக்கான வாக்களிப்பு எவ்வாறு நடைபெறும் என்பதை நாங்கள் விரைவில் அறிவிக்கவுள்ளோம். நீங்கள் வாக்களிக்க ஆர்வமாகக் காத்திருக்கின்றீர்களா? இதே ஆர்வத்துடன் காத்திருங்கள், விரைவில் வாக்களிப்பு முறை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.

#jayabakti #jayabaktikuil #kuilumagazine #kuilvizha2021 #16thkuilvizha2021 #sjkt #competition